இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்


இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 11 Oct 2019 7:49 AM GMT (Updated: 11 Oct 2019 7:49 AM GMT)

கத்ரி கோபால்நாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல்நலக்குறைவால் கர்நாடக மாநிலம் மங்களூருவில் காலமானார். 2004 ம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் பெற்ற இவர் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். டைரக்டர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'டூயட்' படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றிய கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோன் இசை, அனைத்து பாடல்களிலும் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கர்நாடக சங்கீத துறையில் கத்ரி கோபால்நாத்தின் பங்கு மிகப்பெரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story