ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு
ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வரும் 14-ம் தேதி ப.சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, அமலாக்கத்துறை வழக்கில் தான் சரண் அடைவதாக சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது நினைவிருக்கலாம்.
Related Tags :
Next Story