அரசின் வெளிப்படைத்தன்மை ஆர்டிஐ தாக்கல் செய்வதற்கான தேவையை குறைக்கும்- அமித் ஷா


அரசின் வெளிப்படைத்தன்மை ஆர்டிஐ தாக்கல் செய்வதற்கான தேவையை குறைக்கும்- அமித் ஷா
x
தினத்தந்தி 12 Oct 2019 7:35 AM GMT (Updated: 12 Oct 2019 9:35 AM GMT)

அரசின் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதின் மூலம் ஆர்டிஐ தாக்கல் செய்வதற்கான தேவை குறைக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என அமித்ஷா கூறி உள்ளார்.

புதுடெல்லி

மத்திய தகவல் ஆணையத்தின் (சிஐசி) 14 வது ஆண்டு மாநாட்டில்  மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, அவநம்பிக்கையை நிவர்த்தி செய்துள்ளது. அரசின் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதின் மூலம் ஆர்டிஐ தாக்கல் செய்வதற்கான தேவை குறைகிறது. அதிகபட்ச தகவல்களை பொது களத்தில் வைப்பதன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்ட பயன்பாட்டைக் குறைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது .இந்த சட்டம் உருவாக்கும் போது, அதன் தவறான பயன்பாடு குறித்த அச்சங்கள் இருந்தன, ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் இதன் நன்மைகள் தவறான பயன்பாட்டை விஞ்சி விட்டன.

மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கான தகவல்கள் ஏழை பயனாளிகளுக்கு கூட ஆன்லைனில் செல்வதன் மூலம் அவற்றைப் பற்றியும் அவை செயல்படுத்தப்படுவதையும் பற்றிய தகவல்களைப் பெற உதவியுள்ளன என கூறினார்.

Next Story