பிரெஞ்சு முத்தம் கேட்ட மனைவியின் நாக்கை அறுத்த கணவன்
குஜராத்தில் பிரெஞ்சு முத்தம் கேட்ட மனைவியின் நாக்கை கணவன் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அகமதாபாத்,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருபவர் தஸ்லீமா. இவரது கணவர் அன்சாரி. இவர் வேலைக்கு செல்லாமல் வெட்டியாக ஊரை சுற்றி வந்தார். அதனால் கணவன் - மனைவி இருவருக்கும் வாக்குவாதம் எழுந்து சண்டையாக மாறி வந்துள்ளது.
2 நாட்களுக்கு முன்னரும் இருவருக்கும் சண்டை எழுந்தது. வெளியே சென்ற கணவன் வீட்டுக்கு வந்ததும் பிரெஞ்சு முத்தம் வேண்டும் என்று தஸ்லீம் அன்சாரியிடம் கேட்டுள்ளார்.
கணவர் அவருக்கு முத்தம் கொடுக்கும்போது, மனைவின் நாக்கை பிடித்துக் கையில் இருந்த கத்தியால் அறுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் தஸ்லீமா சுருண்டு விழுந்து வலியால் அலறினார். இந்த அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து தஸ்லீமாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுபற்றி தஸ்லீமாவின் கணவரிடம் விசாரித்து வருகின்றார்கள்.
Related Tags :
Next Story