“அயோத்தி வழக்கு தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக இருக்கும்” - முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நம்பிக்கை


“அயோத்தி வழக்கு தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக இருக்கும்” - முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நம்பிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2019 10:45 PM GMT (Updated: 12 Oct 2019 9:40 PM GMT)

அயோத்தி வழக்கு தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக இருக்கும் என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

லக்னோ,

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அவ்வழக்கில் ஒரு மனுதாரரான அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செயற்குழு கூட்டம், அதன் தலைவர் ரபே ஹசன் நட்வி தலைமையில் நேற்று லக்னோவில் நடந்தது.

அதன்பிறகு அந்த வாரியத்தின் நிர்வாகி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அயோத்தி வழக்கில், முஸ்லிம் தரப்பு மூத்த வக்கீல் வலுவான சட்ட வாதங்களை முன்வைத்துள்ளார். எனவே, தீர்ப்பு முஸ்லிம்களுக்கு ஆதரவாக வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

பொது சிவில் சட்டம், நடைமுறைக்கு சாத்தியமற்றது. அச்சட்டம், முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, பிற சமூகத்தினருக்கும் பாதிப்பை உண்டாக்கும். முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வது பற்றி பரிசீலிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story