தேசிய செய்திகள்

இந்திய-சீன நல்லுறவு, ராஜீவ் காலத்தில் தொடங்கியது - காங்கிரஸ் பெருமிதம் + "||" + The Indo-China Relations began in the Rajiv era - the Congress is proud

இந்திய-சீன நல்லுறவு, ராஜீவ் காலத்தில் தொடங்கியது - காங்கிரஸ் பெருமிதம்

இந்திய-சீன நல்லுறவு, ராஜீவ் காலத்தில் தொடங்கியது - காங்கிரஸ் பெருமிதம்
இந்திய-சீன நல்லுறவு, ராஜீவ் காலத்தில் தொடங்கியது என காங்கிரஸ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் இடையேயான 2 நாள் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுவடைந்து உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-சீனா இடையேயான அர்த்தமுள்ள நல்லுறவு ராஜீவ் காந்தி காலத்திலேயே தொடங்கியதாக காங்கிரஸ் கட்சி பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்தியா-சீனா இடையே நடந்த இந்த சந்திப்பை காங்கிரஸ் கட்சியும் கவனத்தில் கொண்டுள்ளது. சீனாவுடன் தொடர்ந்து அர்த்தமுள்ள உறவுகளை இந்தியா பராமரித்து வருகிறது. இது 1988-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் சீன பயணத்தில் தொடங்கியது. அப்போதைய சீன தலைவருடன் ராஜீவ் நடத்திய பேச்சுவார்த்தை, பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் முன்னெடுத்து சென்ற நடவடிக்கைகளால் இருநாட்டு உறவுகள் முதிர்ச்சியடைந்தன’ என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. போலி ஆவணங்கள் மூலம் இந்திய குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் மீது வழக்கு
போலி ஆவணங்கள் மூலம் இந்திய குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. இந்திய, ஜப்பான் உறவு வலுவாகிறது இந்தியர்கள் மத்தியில் மோடி பேச்சு
இந்தியா ஜப்பான் உறவு வலுவாகிறது என்று ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி பேசினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...