மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சியின் போது கையில் குச்சி போன்ற பொருள் அது என்ன? மோடி டுவிட்டரில் விளக்கம்


மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சியின் போது கையில் குச்சி போன்ற பொருள் அது என்ன? மோடி டுவிட்டரில் விளக்கம்
x
தினத்தந்தி 13 Oct 2019 3:56 PM IST (Updated: 13 Oct 2019 3:56 PM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சியின் போது கையில் குச்சி போன்ற பொருள் அது என்ன? என்று மோடி டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

மாமல்லபுரம் அடுத்துள்ள கோவளம் நட்சத்திர விடுதியில் பிரதமர் மோடி தங்கி இருந்தார். நேற்று அதிகாலையில் அவர் ஓட்டல் பின்புறம் உள்ள கடற்கரைக்கு சென்றார். கடல் தண்ணீரில் நடந்தும், அருகில் இருந்த கற்குவியலில் சிறிது நேரம் அமர்ந்தும் இருந்தார்.

பின்னர் கடற்கரையில் கிடந்த குப்பைகளை அவரே சேகரித்து அப்புறப்படுத்தி னார். அந்த காட்சிகள் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது. அப்போது மோடி கையில் ஒரு குச்சி போன்ற பொருள் இருந்தது. அது என்ன என்று அறிய பலரும் ஆர்வப்பட்டனர். ஒவ்வொருவரும்  ஒவ்வொரு விதமான தகவல்களை வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். சிலர் மோடியிடம் இதுபற்றி கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதுபற்றி மோடி இன்று டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

மாமல்லபுரத்தில் குப்பைகளை அள்ளியபோது கையில் வைத்திருந்த பொருள் பற்றி பலரும் என்னிடம் கேட்டு கேள்வி வருகின்றனர். அது  “அக்கு பிரஷர் ரோலர் ” அது எனக்கு மிகவும் உதவிக்கரமாக இருக்கிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பிட்டுள்ளார். 

அத்துடன் அந்த ரோலரை கையில் வைத்து பயிற்சி செய்வது போன்ற சில போட்டோக்களையும் போட்டுள்ளார். 

பிரதமர் மோடி அதிகாலையிலேயே கடற்கரைக்கு சென்று முழங்கால் அளவு தண்ணீரில் நடந்தும், கடல் மணலில் ஜாக்கிங் செய்தும் பயிற்சிசெய்தார். 

அப்போதுதான் ‘பிளாக்கிங்’ முறையில் 30 நிமிடம் கடற்கரையில் கிடந்த குப்பைகளை சேகரித்தார்.

‘பிளாக்கிங்’ என்றால் ஆங்கிலத்தில் ‘பிக் அப் அன்டு ஜாக்கிங்’ என்று அழைக்கப்படுகிறது. நடைப்பயிற்சி மற்றும் சீரான ஓடுதல் பயிற்சி மேற்கொள்ளும்போது இடை இடையே நின்றும், குனிந்தும் உட்கார்ந்தும் கோணிப்பையில் குப்பைகளை சேகரிக்கும் ஒரு வகையான உடற்பயிற்சி தொகுப்பு முறையாகும்.

இது ‘பிளாக்கிங்’ என்றும் ‘பிளக்கிங் சவால்’ என்றும் அழைக்கப்படுகிறது. மோடியின் விளக்கத்தை பார்த்து ஆச்சரியப்பட்டதுடன் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Next Story