திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது: இலவச தரிசனத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பு


திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது: இலவச தரிசனத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பு
x
தினத்தந்தி 13 Oct 2019 5:43 PM IST (Updated: 13 Oct 2019 5:43 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவைத் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவைத் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. நேற்று புரட்டாசி மாதம் 4-வது சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது.

இன்று வரை மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கக் கூடிய திவ்ய தரிசனம் மற்றும் ஆதார் அட்டை மூலம் வழங்கக்கூடிய இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதனால் இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இலவச தரிசனத்தில் வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதால் லேபாக்சி சந்திப்பு வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் ஆகிறது. ஆன்லைன் மூலம் ரூ.300 டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து ஆயிரத்து 371 பேர் சாமி தரிசனம் செய்தனர். 51 ஆயிரத்து 171 பேர் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ரூ. 3 கோடியே 13 லட்சம் உண்டியல் வசூலானது. மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருப்பதால் திருப்பதி மலையில் ஓய்வு அறைகள் அனைத்தும் நிரம்பியுள்ளது.

கூட்டம் அதிகரிப்பு காரணமாக வரிசையில் காத்திருந்த பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பெண் ஒருவர் தன்னை இடித்து விட்டு முன்னே செல்ல முயன்ற பக்தரை தாக்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story