இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது


இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 13 Oct 2019 8:35 PM IST (Updated: 13 Oct 2019 8:35 PM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது.

புதுடெல்லி,

இந்திய அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடியை தான் டுவிட்டரில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பின்தொடர்கின்றனர். அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்பிற்குப் பிறகு  உலகிலேயே டுவிட்டரில் அதிகம் பின்பற்றப்பட்டு வரும் இரண்டாவது அரசியல்வாதியாக பிரதமர் மோடி உள்ளார். டுவிட்டரில் 5.07 கோடி பேர் அவரை பின் தொடர்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் உலக தலைவர்களில் இதுவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் மட்டுமே இதுவரை 30 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களை பெற்றுள்ளனர்.  

இந்நிலையில்  இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 3 கோடி (30 மில்லியன்)  தாண்டியுள்ளது.

Next Story