தேசிய செய்திகள்

மாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி டுவிட்டரில் பகிர்ந்தார் + "||" + Mamallapuram Conversation with the sea Modi shared the poem on Twitter

மாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி டுவிட்டரில் பகிர்ந்தார்

மாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி டுவிட்டரில் பகிர்ந்தார்
சீன அதிபர் ஜின்பிங்குடனான முறைசாரா உச்சி மாநாட்டு சந்திப்புக்காக பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார்.
புதுடெல்லி,

அவர் கடந்த 12-ந் தேதி மாமல்லபுரம் கடற்கரையில், கடல் அலைகளில் கால்களை நனைத்தவாறே நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

அந்த தனது அனுபவங்களை பிரதமர் மோடி, இந்தி மொழியில் நேற்று கவிதை ஆக்கி உள்ளார்.

இதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதுபற்றிய முன்னுரையில்,“ நேற்று மாமல்லபுரத்தில் கடலில் நடந்து நான், கடலில் தொலைந்து போனேன். இந்த உரையாடல் என் ஆத்ம உலகம். இதை உங்களோடு வார்த்தைகளில் பகிர்ந்து கொள்கிறேன்” என கூறி உள்ளார்.


8 பத்திகளில் எழுதி, அவரால் கையெழுத்திடப்பட்ட இந்த கவிதையில், சூரியனுடனும், அலைகளுடனுமான கடலின் உறவையும், அதன் வலியையும் உணர்வுப்பூர்வமாக விவரித்துள்ளார்.

பிரதமர் மோடி ஏற்கனவே எழுதிய கவிதைகள் ‘ஒரு பயணம்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மாமல்லபுரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் புராதன சின்னங்கள் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு
மாமல்லபுரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.
2. மாமல்லபுரத்தில் குவிந்த பிளாஸ்டிக் பைகள் குப்பை தொட்டிகள் அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
மாமல்லபுரம் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் தேங்கி கிடக்கின்றன. அங்கு குப்பை தொட்டிகள் அமைத்து தூய்மை பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. புராதன சின்னங்களை கண்டுகளிக்க மாமல்லபுரத்தில் ஒரே நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் கடும்போக்குவரத்து நெரிசல்
மோடி-ஜின்பிங் சந்திப்பை தொடர்ந்து, மாமல்லபுரத்தில் அனைத்து புராதன சின்னங்களையும் கண்டுகளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஒரே நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
4. பிரதமர் மோடி-சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் சுற்றுலா தலங்களை பார்வையிட தடை
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் வருகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாமல்லபுரத்திலுள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
5. மோடி- ஜின்பிங் வருகை மாமல்லபுரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு
தமிழக பா.ஜ.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க.வினருடன் வந்து மாமல்லபுரத்தில் உள்ள ஐந்துரதம், கடற்கரை கோவில் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.