ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய வழக்கில் நாளை உத்தரவு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நாளை மாலை 4 மணிக்கு உத்தரவு வழங்கப்படும் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் குகர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ப.சிதம்பரம் தரப்பி கபில்சிபல் வாதிடும்போது கூறியதாவது;-
சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது, காவலில் எடுத்து விசாரிக்கவும் கோர முடியாது. மேலும் விசாரணைக்காக மட்டுமே ஒருவரை ஆஜர்படுத்த வேண்டும், கைதுக்காக ஒரு நபரை ஆஜர்படுத்த சட்டத்தில் இடம் இல்லை. ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தால், சிபிஐ காவலின்போது அளித்த வசதிகள் வழங்க வேண்டும் என கூறினார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நாளை மாலை 4 மணிக்கு உத்தரவு வழங்கப்படும் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story