வழக்கு விசாரணை முடிவடைய இருப்பதால் அயோத்தியில் 144 தடை உத்தரவு
அயோத்தி வழக்கு விசாரணை முடிவடைய இருப்பதால், அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அயோத்தி,
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது.
முதலில், சமரச தீர்வு காண்பதற்காக 3 பேர் குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. ஆனால், சமரச தீர்வு முயற்சி பலன் அளிக்காததால், கடந்த ஆகஸ்டு 6-ந் தேதியில் இருந்து அரசியல் சட்ட அமர்வு தினந்தோறும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 17-ந் தேதிக்குள் முடித்து விடுவதாக அரசியல் சட்ட அமர்வு உறுதி அளித்தது. அதற்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால், வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
தசரா விடுமுறைக்கு பிறகு நேற்று மீண்டும் வழக்கு விசாரணை நடந்தது.
இந்நிலையில், வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10-ந் தேதி வரை இது அமலில் இருக்கும். இந்த உத்தரவை மாவட்ட கலெக்டர் அனுஜ் குமார் ஜா பிறப்பித்துள்ளார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் இந்த உத்தரவை பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் ஜா ஒரு செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:-
அயோத்தியின் பாதுகாப்பையும், அங்கு வருபவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், விரும்பத்தகாத செயல்களை செய்தல் ஆகியவை தொடர்பாக ஏற்கனவே ஒரு உத்தரவு அமலில் உள்ளது. அதில் இல்லாத அம்சங்களை சேர்த்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அயோத்தியை படம் பிடிக்க குட்டி விமானங்களோ, ஆளில்லா விமானங்களோ பறக்கக்கூடாது. தீபாவளியையொட்டி, கலெக்டர் அனுமதியின்றி, பட்டாசுகளை வாங்கவோ, விற்கவோ கூடாது. 4 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. கலவரத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய போலீசாருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
சட்டம்-ஒழுங்கை பராமரிக்க பெருமளவு பாதுகாப்பு படைகளை கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story