இந்தியா அடுத்த போரை உள்நாட்டு ஆயுதங்களுடன் எதிர்த்துப் போராடி வெல்லும் -இந்திய ராணுவ தலைமை தளபதி


இந்தியா அடுத்த போரை உள்நாட்டு ஆயுதங்களுடன் எதிர்த்துப் போராடி வெல்லும் -இந்திய ராணுவ தலைமை தளபதி
x
தினத்தந்தி 15 Oct 2019 12:14 PM IST (Updated: 15 Oct 2019 12:16 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா அடுத்த போரை உள்நாட்டு ஆயுதங்களுடன் எதிர்த்துப் போராடி வெல்லும் என இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறி உள்ளார்.

புதுடெல்லி

புதுடெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்  41-வது டி இயக்குநர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு  ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் பேசும்போது கூறியதாவது:-

இந்தியா அடுத்த போரை  உள்நாட்டில் தயாராகும்  ஆயுதங்களுடன் எதிர்த்துப் போராடி வெல்லும், எதிர்கால போரில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது ஆகும். "நாம்  எதிர்கால போருக்கான அமைப்புகளைப் ஆய்வு செய்து வருகிறோம். சைபர், ஸ்பேஸ், லேசர், எலக்ட்ரானிக் மற்றும் ரோபோ தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் வளர்ச்சியை நாம் பார்க்கத் தொடங்க வேண்டும்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்கள் மூலம் ஆயுதப்படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்யும் வகையில் முன்னேறியுள்ளது என கூறினார்.

தேசிய பாதுகப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசும்போது கூறியதாவது;-

முக்கிய தொழில்நுட்பங்கள் தேவை அடிப்படையிலானதாக இருக்க வேண்டும்.  அவை இந்தியாவை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற முடியும். நமது  எதிரிகளுக்கு நாம்  கொடுக்க வேண்டியது என்ன என்பதை நாம் கடுமையாக மதிப்பீடு செய்ய வேண்டும் என கூறினார்.

Next Story