பீகாரில் மத்திய அமைச்சர் அஷ்வினி சவுபே மீது மை வீச்சு


பீகாரில் மத்திய அமைச்சர் அஷ்வினி சவுபே மீது மை வீச்சு
x
தினத்தந்தி 15 Oct 2019 1:39 PM IST (Updated: 15 Oct 2019 1:39 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் மத்திய அமைச்சர் அஷ்வினி சவுபே மீது மை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாட்னா, 

பீகார் தலைநகர் பாட்னாவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை மத்திய அமைச்சர் அஷ்வினி சவுபே நேரில் சென்று சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அவர் மருத்துவமனையில்  இருந்து திரும்பும் போது, வெளியில் நின்றிருந்த  நோயாளிகளின் உறவினர்கள் மத்திய அமைச்சர் அஷ்வினி சவுபே மீது  மை வீசினர். 

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது மத்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் மை வீசியதாக கூறப்படுகிறது. மை வீசிய அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பீகாரின் பாட்னாவில் கடந்த  மாதத்தில் இருந்து தற்போது வரை 900 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story