பப்ஜி விளையாட்டுக்கு அடிமை ; கடத்தப்பட்டதாக நாடகமாடிய 16 வயது சிறுவன் மீட்பு


பப்ஜி விளையாட்டுக்கு அடிமை ; கடத்தப்பட்டதாக நாடகமாடிய 16 வயது சிறுவன் மீட்பு
x
தினத்தந்தி 15 Oct 2019 3:47 PM IST (Updated: 15 Oct 2019 3:47 PM IST)
t-max-icont-min-icon

பப்ஜி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாக இருந்த 16 வயது சிறுவனிடமிருந்து தாய் கைபேசியை பறித்ததால் வீட்டிலிருந்து ஓடி கடத்தப்பட்டதாக நாடகமாடிய சிறுவன் போலீசாரால் மீட்கப்பட்டான்.

ஹைதராபாத்,

பப்ஜி எனப்படும் ஆன்லைன் விளையாட்டு சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவராலும் ஈர்க்கப்பட்டு உள்ளது. உலகளவில் பிரபலமான பப்ஜி ஆன்லைன் விளையாட்டு இந்தியாவிலும் விளையாடப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டுக்கு இளைஞர்கள் பலர் முற்றிலும் அடிமையாகி உள்ளனர்.

தற்போது ஹைதராபாத்தில் 16 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டிற்கு  அடிமையாகி உள்ளான். இவனது தாய் தனது மகனை இந்த ஆன்லைன் விளையாட்டிலிருந்து மீட்பதற்காக சிறுவனின் கைபேசியை பறிமுதல் செய்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த சிறுவன் வீட்டிலிருந்து வெளியேறி வெவ்வேறு தொலைபேசிகளில் அவர்களுடன் தொடர்பு கொண்டு வேறு குரலில் பேசி தான் கடத்தப்பட்டதாக கூறியுள்ளான். மேலும், கடத்தப்பட்ட தான் விடுவிக்கப்பட வேண்டும் என்றால் ரூ. 3 லட்சம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளான்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரின் தேடுதலில் சிறுவன் ஹைதராபாத் பஸ் நிலையம் அருகே மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

Next Story