1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்; மராட்டிய சட்டசபைக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கை
அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என மராட்டிய சட்டசபைக்கான தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. தெரிவித்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. மராட்டிய சட்டமன்றத்தின் 288 தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற அக்டோபர் 21ந்தேதி நடைபெற உள்ளது. அதனால் 2வது முறையாக ஆட்சிக்கு வருவதற்கான முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளது.
தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா அக்கட்சிக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். அதில், வீர் சாவர்க்கர் என்ற பிரபல பெயரால் அறியப்படும் விநாயக தாமோதர் சாவர்க்கருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணியிடம் நாங்கள் கேட்போம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். வருகிற 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படும். ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story