பாட்னா, பாங்கிபூர் தொகுதி எம்.எல்.ஏ.-வுக்கு டெங்கு காய்ச்சல்...!


பாட்னா, பாங்கிபூர் தொகுதி எம்.எல்.ஏ.-வுக்கு டெங்கு காய்ச்சல்...!
x
தினத்தந்தி 16 Oct 2019 12:33 PM IST (Updated: 16 Oct 2019 2:00 PM IST)
t-max-icont-min-icon

பாட்னா நகரின் அருகேயுள்ள பாங்கிபூர் தொகுதியின் எம்.எல்.ஏ. நிதின் நவின் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

பாட்னா,

ஏ.டி.எஸ். கொசுக்கடியால் உண்டாகும் டெங்கு காய்ச்சல் நாடெங்கும் பரவி வருகிறது. பீகார் மாநிலம் பாட்னாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பிறகு உற்பத்தியாகும் ஏ.டி.எஸ். கொசுக்களால் டெங்கு மற்றும் சிக்குன் குனியா பரவி வருகின்றன.

இதனால், பாட்னாவில் 80 பேர் டெங்கு காய்ச்சலாலும், 76 பேர் சிக்குன் குனியா காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி தகவல் வெளியானது.

இந்த காய்ச்சலுக்கு பெரும்பாலும் பொதுமக்களே பாதிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் தற்போது பாட்னா நகரின் அருகேயுள்ள பாங்கிபூர் தொகுதியின் எம்.எல்.ஏ. நிதின் நவின் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ. நிதின் நவின் கூறியதாவது:-

மக்கள் அனைவரும் டெங்கு காய்ச்சல் வருவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த காய்ச்சல் பரவாமல் தடுக்க நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story