அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளிக்கும் தீர்ப்பை ஏற்க வேண்டும்; முஸ்லிம் தலைவர்கள் வலியுறுத்தல்


அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளிக்கும் தீர்ப்பை ஏற்க வேண்டும்; முஸ்லிம் தலைவர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Oct 2019 5:31 AM IST (Updated: 17 Oct 2019 5:31 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தி வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பை இருதரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மும்பையை சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் கூறியுள்ளனர்.

மும்பை,

அகில இந்திய உலமா கவுன்சில் பொதுச்செயலாளர் மவுலானா மெக்பூப் தர்யாடி, “மத உணர்வுகள் அடிப்படையில் இல்லாமல், ஆதாரங்கள் அடிப்படையில் கோர்ட்டு இறுதி முடிவு எடுக்க வேண்டும். கோர்ட்டு எந்த முடிவு எடுத்தாலும் ஏற்போம் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். அதுபோல், எதிர்தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய செயற்குழு உறுப்பினர் மவுலானா சயீத் அதாரலி, “நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம். இருப்பினும், தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதை மதிப்போம்” என்று கூறினார். கோஜா-ஷியா ஜமாத் மூத்த உறுப்பினர் ஷப்பிர் சோம்ஜியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.

Next Story