மேற்கு வங்காளத்தில் பரபரப்பு : தலைமைச் செயலகத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் வருகை
மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிற மேற்கு வங்காள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாரதா சீட்டு ஊழலை விட பெரிய ஊழலாக கருதப்படுவது, ரோஸ்வேலி ஊழல் ஆகும்.
கொல்கத்தா,
சட்ட விரோதமான திட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து ரூ.17 ஆயிரத்து 500 கோடிக்கும் மேலாக வசூலித்து ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்து சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது.
இந்த விசாரணை தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று காலை திடீரென வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் மாநில அரசு தலைமைச் செயலாளர் ராஜிவா சின்கா, நிலத்துறை சிறப்பு பணி அதிகாரி ஆகியோருக்கு கடிதம் வழங்கியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ரோஸ்வேலி ஊழல் தொடர்பான அனைத்து கோப்புகளையும் ஒப்படைக்குமாறும், நிலத்துறை சிறப்பு பணி அதிகாரி 18-ந் தேதி (நாளை) நேரில் ஆஜராகுமாறும் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அளித்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
Related Tags :
Next Story