இந்திய பொருளாதாரம் மோசம் அபிஜித் பானர்ஜி கருத்து: மத்திய அரசு குற்ற உணர்வுக்கு ஆட்பட்டதாகத் தெரியவில்லை ப.சிதம்பரம் விமர்சனம்


இந்திய பொருளாதாரம் மோசம் அபிஜித் பானர்ஜி கருத்து: மத்திய அரசு குற்ற உணர்வுக்கு ஆட்பட்டதாகத் தெரியவில்லை ப.சிதம்பரம் விமர்சனம்
x
தினத்தந்தி 17 Oct 2019 1:19 PM IST (Updated: 17 Oct 2019 4:26 PM IST)
t-max-icont-min-icon

பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி இந்தியப் பொருளாதாரம் குறித்து வெளியிட்ட அறிக்கை மத்திய அரசு குற்ற உணர்வுக்கு ஆட்பட்டதாகத் தெரியவில்லை என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் பொருளாதார சூழல் குறித்தும், மத்திய அரசின் கொள்கைகள் குறித்தும் ப.சிதம்பரம் அவ்வப்போது டுவிட்டரில் தனது குடும்பத்தினர் மூலம் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இந்தியப் பொருளாதாரம் குறித்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், விரைவில் அது மீண்டு எழும் என்று உறுதியாக கூற முடியாது.

கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் சில வளர்ச்சியை கண்டோம். ஆனால், இப்போது அந்த உறுதிப்பாடும் போய்விட்டது என கருத்து தெரிவித்திருந்தார்.  மேலும் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தவும், தேவையை உருவாக்கவும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  

அதனை சுட்டிக்காட்டி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம்  கூறுகையில், " இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து மத்திய அரசு குற்ற உணர்வுக்கு ஆட்பட்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசு உணரும் வரை நாள்தோறும் இரு பொருளாதாரக் குறியீடுகளை நான் பதிவிடுவேன்.

இன்றைய பொருளாதாரக் குறியீடுகள்: 

1. இந்தியாவில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தனிமனிதர் நுகர்வுச் செலவு குறைந்துவிட்டது. இதன் அர்த்தம் ஏழைகள் குறைவாக நுகர்கிறார்கள்.

2. பட்டினி நாடுகள் குறியீட்டில் இந்தியா 117 நாடுகளில் 112-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் நாட்டில் தீவிரமான பசியோடு இருக்கும் மக்கள் அதிகம்" என பதிவிட்டுள்ளார்.

Next Story