வங்கதேசம் அத்துமீறி தாக்குதல்: இந்திய பாதுகாப்பு படை வீரர் பலி


வங்கதேசம் அத்துமீறி தாக்குதல்: இந்திய பாதுகாப்பு படை வீரர் பலி
x
தினத்தந்தி 18 Oct 2019 2:58 AM GMT (Updated: 18 Oct 2019 2:58 AM GMT)

வங்கதேச பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் இந்தியா - வங்கதேச எல்லைப் பகுதியில் உள்ள பத்மா நதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். வங்கதேச எல்லைக்குள் சென்றுவிட்டதாக அந்நாட்டு எல்லை பாதுகாப்புப்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். 

பின்னர் இருவர் விடுவிக்கப்பட்ட நிலையில், மற்றொருவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப்படையிர் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த வங்கதேச வீரர்கள் 4 பேர், இந்திய வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் விஜய் பன் சிங் என்ற வீரர் உயிரிழந்தார்.

தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் வங்கதேசம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனிடையே வங்கதேச எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக, மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளிடம், எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். வங்கதேச பாதுகாப்புப் படை துப்பாக்கிச்சூடு நடத்தியதை தொடர்ந்து, எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வங்காளதேச படையினர் தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரர்  விஜய் பன் சிங், கடந்த 1990 ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படையில் பணியில் சேர்ந்துள்ளார்.


Next Story