அரசின் திட்டத்தால் வானிலையை நம்பியிருக்க வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்படாது -பிரதமர் மோடி பேச்சு


அரசின் திட்டத்தால் வானிலையை நம்பியிருக்க வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்படாது -பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 18 Oct 2019 5:49 PM IST (Updated: 18 Oct 2019 5:49 PM IST)
t-max-icont-min-icon

அரசின் திட்டத்தால் வானிலையை நம்பியிருக்க வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்படாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சண்டிகார்,

அரியானா, மராட்டிய மாநிலங்களில் வருகிற 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இந்த இரு மாநிலங்களிலும் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. நாளை மாலையுடன் பிரசாரம் ஓய  இருப்பதால் இன்றும் நாளையும் இறுதிக்கட்ட பிரசாரம் நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களாக இந்த இரு மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசி  வருகிறார். இன்று அவர் அரியானாவில் உள்ள கிஷார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

தாய்மார்கள், சகோதரிகள், விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை போக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் திட்டத்தால் நீருக்காக வானிலையை நம்பியிருக்க வேண்டிய சூழல் இனி விவசாயிகளுக்கு ஏற்படாது.

நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. நீர் மேலாண்மையில்  தற்போது உள்ள முறைகளை மாற்ற முயற்சி செய்து வருகிறோம். 

வீட்டு உபயோக நீரை மறுசுழற்சி செய்து பாசனத்துக்கு  பயன்படுத்துவதற்கான அமைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.  கிராமங்களில் உள்ள நீர் நிர்வாகத்தின் பழைய முறைகளை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story