மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: நாட்டின் வளர்ச்சியையும் திரைத்துறையினர் எடுத்துரைக்க வேண்டும்- பிரதமர் மோடி
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் வளர்ச்சியையும் திரைத்துறையினர் எடுத்துரைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
புதுடெல்லி,
மகாத்மா காந்தியின் 150- வது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது மகாத்மா காந்தி குறித்த குறும்படம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில், முன்னணி நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான், நடிகைகள் கங்கனா. ரணவத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தயாரிப்பாளர் போனிகபூர், ஏக்தா கபூர், இம்தியாஸ் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது காந்தியின் போதனைகளை பரப்புவதில் திரைத்துறை பெரும் பங்காற்றுவதாக தெரிவித்த மோடி, 1947 வரையிலான சுதந்திர போராட்ட எழுச்சியையும், 1947 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான நாட்டின் வளர்ச்சியையும் திரைத்துறை எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் தண்டியில் உள்ள அருங்காட்சியகத்தை அனைவரும் பார்வையிடுமாறு மோடி கேட்டுக் கொண்டார்.
பின்னர் பிரதமருடன் நடிகர் நடிகைகள் ஆர்வமாக செல்பி எடுத்து கொண்டனர்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, திரையுலக பிரபலங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார். காந்தி பற்றிய விழிப்புணர்வுகளைப் பரப்புவதில் கலைஞர்களின் பங்கு குறித்து மோடி தங்களிடம் கலந்துரையாடியதற்கு நன்றி என நடிகர் ஷாருக்கான் டுவீட் செய்துள்ளார்.
Related Tags :
Next Story