மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு: முதலமைச்சர் பழனிசாமி கூறியதாக பிரதமர் மோடி டுவீட்


மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு: முதலமைச்சர் பழனிசாமி கூறியதாக பிரதமர் மோடி டுவீட்
x
தினத்தந்தி 20 Oct 2019 3:38 PM IST (Updated: 20 Oct 2019 4:37 PM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் நடந்த முறைசாரா உச்சி மாநாட்டிற்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என முதலமைச்சர் பழனிசாமி கூறியதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் கடந்த 10, 11-ந் தேதிகளில் நடந்தது. அப்போது மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களின் வரலாற்று பெருமையை சீன அதிபருக்கு மோடி எடுத்துரைத்தார். 

இரு தலைவர்களும் வந்து சென்ற பிறகு மாமல்லபுரம் மேலும் பிரபலமானது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து விட்டது. தினமும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் மட்டுமின்றி உள் நாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து மாமல்லபுரத்தை கண்டு ரசிக்கிறார்கள்.

இந்நிலையில்,  இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

மாமல்லபுரத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு பின் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவதாக தமிழக முதலமைச்சர்  என்னிடம் கூறினார். வரலாற்று சின்னமான இடங்களை ஏராளமான மக்கள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர். உலகின் மிக சிறப்பான படைப்பாற்றலை காண அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் இந்தியா வரவேண்டும்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Next Story