மராட்டியம் - அரியானாவில் நாளை சட்டசபை தேர்தல்
மராட்டியம் - அரியானாவில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
புதுடெல்லி,
288 தொகுதிகள் கொண்ட மராட்டியம் மாநிலத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் 235 பெண்கள் உள்பட 3 ஆயிரத்து 237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு ஆளும் பாஜக- சிவசேனா கூட்டணிக்கும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
இதேபோல, 90 தொகுதிகளை கொண்ட அரியானா தேர்தல் களத்தில், 105 பெண்கள் உள்பட ஆயிரத்து 169 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ் ஜே.ஜே.பி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இருமாநிலங்களிலும், தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை பதிவாகும் வாக்குகள், வருகிற 24ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது. இத்துடன் மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது.
Related Tags :
Next Story