எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு: ராகுல் காந்தி கிண்டல்
எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு என்று தெரிவித்த பா.ஜனதா வேட்பாளரை ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
புதுடெல்லி,
அரியானா சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. முன்னதாக இந்த மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அசாந்த் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பக்ஷிஷ் சிங் விர்க், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நீங்கள் எந்த பொத்தானை அழுத்தினாலும், அது தாமரைக்கே (பா.ஜனதா) விழும் எனவும், அதற்காக வாக்குப்பதிவு எந்திரங்களில் மாற்றம் செய்திருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த வீடியோ மாநிலம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து அவரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அவரது தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங் களை ஆய்வு செய்ய பார்வையாளர் ஒருவரையும் நியமித்தது.
இந்த நிலையில் பக்ஷிஷ் சிங் பேசிய அந்த வீடியோவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் நேற்று தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தார். அத்துடன், ‘பா.ஜனதாவில் உள்ள மிகவும் நேர்மையான மனிதன்’ என்றும் அவர் கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார்.
The most honest man in the BJP. pic.twitter.com/6Q4D43uo0d
— Rahul Gandhi (@RahulGandhi) 21 October 2019
Related Tags :
Next Story