ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன்


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன்
x
தினத்தந்தி 22 Oct 2019 11:00 AM IST (Updated: 22 Oct 2019 11:00 AM IST)
t-max-icont-min-icon

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

 ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதான ப.சிதம்பரம் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளார்.

சிபிஐ பதிவு செய்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மனு மீது  நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்  விசாரணை நடத்தி வந்தது.

ப. சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் தரப்பு வாதங்கள் முடிவடைந்தன. இதை தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டது.

ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.  அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ப. சிதம்பரம் வேறு எந்த வழக்கிலும் கைது செய்யப்படவில்லை மற்றும் ரூ .1 லட்சம் பத்திர தனிப்பட்ட ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார்.  அவர்  விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறி உள்ளனர்.

ப.சிதம்பரம் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

Next Story