ஹெல்மெட் அணிந்த நாயின் பைக் சவாரி: வைரலாகும் புகைப்படம்


ஹெல்மெட் அணிந்த நாயின் பைக் சவாரி: வைரலாகும் புகைப்படம்
x
தினத்தந்தி 22 Oct 2019 11:55 AM IST (Updated: 22 Oct 2019 11:55 AM IST)
t-max-icont-min-icon

ஹெல்மெட் அணிந்து பைக் சவாரி செய்யும் நாயின் புகைப்படம் ஒன்று வைரலாகி உள்ளது.

புதுடெல்லி,

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து,  வாகன ஓட்டிகள்  அதிக அபராதங்களைத் தவிர்ப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் பெரும் அபராதம் செலுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக எந்த அளவிற்கும் செல்கின்றனர்.

தனது நாயிற்கு ஹெல்மெட் அணிவித்து அதன் உரிமையாளர் மோட்டார் சைக்கிளின் பின்புற இருக்கையில் அமரவைத்து அழைத்து செல்லும்  புகைப்படம் ஒன்று தற்போது  இணையத்தில் வைரலாகி  உள்ளது.

இந்த படம் முதன்முதலில் ஆன்லைனில் செப்டம்பர் மாதம் காணப்பட்டது, ஆனால் ட்விட்டர் பயனர் பிரேர்னா சிங் பிந்த்ரா தனது சுயவிவரத்தில் பகிர்ந்த பின்னர் மீண்டும் வைரலாகியுள்ளது.

படத்தைப் பகிர்ந்து அவர் "எனக்கு மிகவும் பிடித்தமான படம்.  ஹெல்மெட் பயன்படுத்துவதற்கான பிரசாரமாக டெல்லி போலீசார் இதனை பயன்படுத்த வேண்டும்" என கேட்டு கொண்டு உள்ளார். 


இருப்பினும், இந்த புகைப்படத்தை அவர் எடுக்கவில்லை என்றும் ஆனால் ஒரு வாட்ஸ்அப் ஃபார்வர்ட் என்றும் பிரேர்னா தெளிவுபடுத்தி உள்ளார்.

ட்விட்டர் பயனர் இந்த படத்தை அக்டோபர் 19 அன்று பகிர்ந்தார். அவர் அதை ஆன்லைனில் பதிவிட்ட உடனேயே ஏராளமான பயனர்கள் இது போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளனர்.

Next Story