குரு நானக் பிறந்த தின கொண்டாட்டம்; 90 வெளிநாட்டு தூதர்கள் பொற்கோவிலுக்கு வருகை
குரு நானக் தேவ் 550வது ஆண்டு பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 90 வெளிநாட்டு தூதர்கள் பொற்கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.
புதுடெல்லி,
சீக்கிய மதத்தின் நிறுவனர் குரு நானக் தேவ். இவரது 550வது ஆண்டு பிறந்த தினம் இந்த வாரம் கொண்டாடப்படுகிறது. இதனை உலகம் முழுவதும் கொண்டாட மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.
இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் (ஐ.சி.சி.ஆர்.), பஞ்சாப் அரசு மற்றும் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு ஆகியவை இணைந்து கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதில் பங்கேற்பதற்காக டெல்லியில் உள்ள 90 வெளிநாட்டு தூதரகங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டது.
இதனை முன்னிட்டு, புதுடெல்லியில் இருந்து அவர்கள் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் வெளிநாட்டு தூதரக தலைவர்களுடன் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி மற்றும் ஐ.சி.சி.ஆர். தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
Related Tags :
Next Story