கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தல்: எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது -தேவேகவுடா


கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தல்: எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது -தேவேகவுடா
x
தினத்தந்தி 22 Oct 2019 8:32 PM IST (Updated: 22 Oct 2019 8:32 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகா உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியுள்ளார்.

பெங்களூரு,

2 மாநகராட்சிகள், 6 நகரசபைகள் உள்பட 14 உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.  நவம்பர் 14-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறை உடனடியாக அமலுக்கு வருகின்றன.

இந்தநிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகா உள்ளாட்சித் தேர்தலில்  ஜனதாதளம்(எஸ்)  தனித்தே போட்டியிடும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றார்.

Next Story