கர்நாடகாவில் கனமழைக்கு 12 பேர் பலி


கர்நாடகாவில் கனமழைக்கு 12 பேர் பலி
x
தினத்தந்தி 23 Oct 2019 2:15 AM IST (Updated: 23 Oct 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் கனமழைக்கு 12 பேர் பலியாகியுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி, கதக், தார்வார் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள ஆலமட்டி அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கனஅடியாக உள்ளது. இதனால் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், பெலகாவி மாவட்டத்தில் கோகாக் நகரில் பெய்த கனமழைக்கு நேற்று முன்தினம் வரை 7 பேர் மரணம் அடைந்தனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழைக்கு 5 பேர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடகத்தில் கனமழைக்கு இதுவரை 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Next Story