அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் முன்னிலை
அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மூன்றாம் சுற்று எண்ணிக்கையின் முடிவில் 14,030 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
மும்பை,
மராட்டியம் மற்றும் அரியானா மாநிலங்களில் கடந்த 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 288 இடங்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின. 90 இடங்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
இந்நிலையில் தற்போது மராட்டியம் மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது
* மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் முன்னிலை விவரம் வருமாறு : பாஜக 99, சிவசேனா 60 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தேசியவாத காங்கிரஸ் 48 தொகுதிகளிலும் காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
* அரியானாவில் பாஜக-40 இடங்களிலும் காங்கிரஸ்-25 இடங்களிலும் மற்றவர்கள்-21 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறார்கள்.
* மராட்டியம் : பல்லுஜன் விகாஸ் ஆகாதியின் க்ஷிதிஜ் ஹிதேந்திர தாக்கூர் நாசோபரா சட்டசபை தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்
* கர்னல் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிடும் அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மூன்றாம் சுற்று எண்ணிக்கையின்முடிவில் 14,030 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.
* இமாச்சல பிரதேச சட்டமன்ற இடைத்தேர்தல்: தர்மஷாலா மற்றும் பச்சத் தொகுதிகளில் பாரதீய ஜனதா முன்னிலை வகிக்கிறது
* உத்தரபிரதேச சட்டசபை இடைத்தேர்தல்: பாஜக -5 இடங்களிலும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் தலா 2 இடங்களிலும் , மற்றும் ஐஎன்சி ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளது.
* குஜராத் சட்டமன்ற இடைத்தேர்தல்: 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது, 2 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
Related Tags :
Next Story