போக்ரான்: பயிற்சியின் போது போர் பீரங்கி பீப்பாய் வெடித்து ராணுவ வீரர் பலி


போக்ரான்: பயிற்சியின் போது போர் பீரங்கி பீப்பாய் வெடித்து ராணுவ வீரர் பலி
x
தினத்தந்தி 1 Nov 2019 11:54 AM IST (Updated: 1 Nov 2019 11:54 AM IST)
t-max-icont-min-icon

போக்ரானில் பயிற்சியின் போது போர் பீரங்கி பீப்பாய் வெடித்ததில் சிப்பாய் பலியானார்.

போக்ரான்

ராஜஸ்தானின் போக்ரானில் உள்ள மகாஜன் துப்பாக்கிச் சூடு பயிற்சி முகாமில் வழக்கமான கள துப்பாக்கிச் சூடு பயிற்சி நடைபெற்றது அப்போது  90 பீரங்கியின்  பீப்பாய் வெடித்ததில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

விபத்து குறித்து இறந்தவரின் குடும்பத்திற்கு ராணுவம் தகவல் தெரிவித்து உள்ளது.  இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள போக்ரான்  பாலைவனத்தில்  உள்ள இராணுவத்தின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பயிற்சி பகுதியாகும்.

Next Story