அக்டோபரில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8.5 சதவீதமாக உயர்ந்து உள்ளது


அக்டோபரில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8.5 சதவீதமாக  உயர்ந்து உள்ளது
x
தினத்தந்தி 1 Nov 2019 4:21 PM IST (Updated: 1 Nov 2019 5:28 PM IST)
t-max-icont-min-icon

அக்டோபரில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8.5 சதவீதமாக உயர்ந்து உள்ளது என இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

இந்தியாவின் உள்கட்டமைப்பு உற்பத்தி செப்டம்பர் மாதத்தில் 5.2 சதவீதம் சரிந்து உள்ளது. இது இந்த ஆண்டின்  மிக மோசமான செயல்திறன் ஆகும்.  தொழில்துறை உற்பத்தி ஆகஸ்ட் மாதத்தில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக மிக விரைவான விகிதத்தில் குறைந்து உள்ளது. 

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்  பொருளாதாரம் செப்டம்பரில் 7.2 சதவீமாக  உயர்ந்தது என்று கூறி உள்ளது. இது  பொருளாதாரத்தில் மந்தநிலையின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது. 

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்  அக்டோபரில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8.5 சதவீதமாக  உயர்ந்து உள்ளது என கூறி உள்ளது. இது ஆகஸ்ட் 2016 முதல் இது தான் மிக உயர்ந்தது ஆகும்.

Next Story