தேசிய செய்திகள்

‘முத்தலாக்’கை எதிர்த்த பெண்ணுக்கு விஷம் கொடுத்தனர் + "||" + They poisoned the woman who opposed Triple Talak

‘முத்தலாக்’கை எதிர்த்த பெண்ணுக்கு விஷம் கொடுத்தனர்

‘முத்தலாக்’கை எதிர்த்த பெண்ணுக்கு விஷம் கொடுத்தனர்
முத்தலாக்கை எதிர்த்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் விஷம் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாலசோர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஹமத். இவருக்கும் குஷ்பு என்ற பெண்ணுக்கும் இரண்டரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கூடுதல் வரதட்சணை கேட்டு, குஷ்புவை கணவரும், அவருடைய குடும்பத்தினரும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, வேலை விஷயமாக ரஹமத் வெளிமாநிலத்துக்கு சென்றார்.


அங்கிருந்தபடியே, குஷ்புவிடம் தொலைபேசியில் மூன்று தடவை ‘தலாக்’ சொன்னார். இதுகுறித்து கிராம பெரியவர்களிடம் கூறியபோது, ரஹமத் திரும்பி வரும்வரை காத்திருக்குமாறு கூறினர்.

ரஹமத் திரும்பி வந்தபோது, குஷ்புவை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார். குஷ்பு எதிர்ப்பு தெரிவிக்கவே, அவருக்கு ரஹமத் குடும்பத்தினர் பூச்சி மருந்து கொடுத்து குடிக்கச் செய்தனர். இதுதொடர்பாக முத்தலாக் தடை சட்டம், கொலை முயற்சி, வரதட்சணை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் ரஹமத் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை
முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு 2020 முதல் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
2. கோணலான பற்கள் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவன்
கோணலான பற்கள் இருப்பதாக கூறி மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவன் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
3. பாகிஸ்தானில் முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக்க இஸ்லாமிய அமைப்பு பரிந்துரை
பாகிஸ்தானில் முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக்க இஸ்லாமிய அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
4. முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.