திருமணம் நிச்சயிக்கப்பட்டவர் சுத்தியலால் அடித்து கொடூர கொலை
திருமணம் நிச்சயிக்கப்பட்டவர் சுத்தியலால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
முசாபர்நகர்,
உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சாபர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் (வயது 25). இவருக்கு வருகிற 19-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது. கடந்த மாதம் 29-ந் தேதியில் இருந்து அவரை காணவில்லை. இதற்கிடையில் வியாழக்கிழமை அன்று, அந்த கிராமத்தில் உள்ள வயல்வெளியில், உடலில் பலத்த காயங்களுடன் அவர் பிணமாக கிடந்தார். அவரது தலை சுத்தியலால் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை நடத்தினர். இந்த கொலை சம்பவத்தில் ஆரியகாந்த் என்பவர் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். மேலும் கொலை நடக்கும்போது அந்த கொடூர சம்பவம் வீடியோவாகவும் எடுக்கப்பட்டு உள்ளது. அதன் 4 பதிவுகள் தற்போது போலீசாரிடம் சிக்கி இருக்கிறது. “இந்த கொலைக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. கொலையாளியை விரைவில் பிடித்துவிடுவோம்” என்று போலீசார் கூறினர்.

Related Tags :
Next Story