ஊழல் புரிந்த 10 ராணுவ அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்


ஊழல் புரிந்த 10 ராணுவ அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்
x
தினத்தந்தி 2 Nov 2019 2:02 AM IST (Updated: 2 Nov 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஊழலில் ஈடுபட்டதாக 10 ராணுவ அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

புதுடெல்லி,

இந்திய ராணுவத்தில் ராணுவ தளபதியாக பிபின் ராவத் பதவி வகித்து வருகிறார். அவர், ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டு போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட 10 ராணுவ அதிகாரிகள் ‘வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு’ உள்ளனர்.

ராணுவ சட்டப்படி ‘வீட்டுக்கு அனுப்புவது’ என்றால் அவர்களை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதுடன், ஓய்வூதிய (பென்சன்) பயன்களும் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை ராணுவ உயர் அதிகாரி அஸ்வினி குமார் தெரிவித்தார்.

Next Story