அரியானா எதிர்க்கட்சி தலைவராக பூபிந்தர் சிங் ஹூடா நியமனம்


அரியானா எதிர்க்கட்சி தலைவராக பூபிந்தர் சிங் ஹூடா நியமனம்
x
தினத்தந்தி 3 Nov 2019 2:39 AM IST (Updated: 3 Nov 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

அரியானா எதிர்க்கட்சி தலைவராக பூபிந்தர் சிங் ஹூடா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

அரியானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் வெற்றி பெற்றது. அங்கு பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், சட்டசபை காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் சட்டசபை காங்கிரஸ் தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை கட்சியின் தேசியத்தலைவர் சோனியாவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடாவை சட்டசபை காங்கிரஸ் தலைவராக சோனியா நியமித்து உள்ளார். இதன் மூலம் சட்டசபை காங்கிரஸ் தலைவராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் ஹூடா செயல்படுவார் என அரியானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் நேற்று டெல்லியில் தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா மற்றும் பூபிந்தர் சிங் ஹூடா இணைந்து கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்ததாக கூறிய குலாம் நபி ஆசாத், இதனால் கடந்த தேர்தலை விட மாநிலத்தில் கட்சியின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்தார்.


Next Story