அயோத்தி வழக்கு தீர்ப்பு : உ.பி.யில் தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் -டிஜிபி


அயோத்தி வழக்கு தீர்ப்பு : உ.பி.யில் தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் -டிஜிபி
x
தினத்தந்தி 4 Nov 2019 9:34 AM GMT (Updated: 4 Nov 2019 9:34 AM GMT)

அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் தேவைப்பட்டால் உபியில் தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என டிஜிபி கூறி உள்ளார்.

லக்னோ

அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்  இம்மாத மத்தியில் தீர்ப்பு  அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய உத்தரப்பிரதேச காவல்துறை டிஜிபி ஓ.பி.சிங்,  எந்தச் சூழ்நிலையிலும் யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது எனக் கூறினார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக, தேவைப்பட்டால் தேசப்பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். இச்சட்டத்தின் படி முன்னெச்சரிக்கையாக ஒரு நபரைக் கைது செய்து 12 மாதங்கள் வரை சிறையில் அடைக்க முடியும்.

இதனிடையே கடவுள்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பக் கூடாது என அம்மாநில அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story