எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று சந்திப்பு -நாட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை

எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று சந்திப்பு -நாட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 4 Nov 2019 3:43 PM IST (Updated: 4 Nov 2019 3:43 PM IST)
t-max-icont-min-icon

நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகள், பாங்காக் நகரில் நடக்கும் பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவுப் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று டெல்லியில் கூடுகின்றனர்.

புதுடெல்லி,

நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகள், பாங்காக் நகரில் நடக்கும் பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவுப் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று டெல்லியில் கூடுகின்றனர்.

இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்குகிறார். மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஏஐயுடிஎப், திமுக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில்,  பாங்காக்கில் நடைபெறும் பிராந்தியக் கூட்டுறவு பொருளாதாரப் பேச்சுவார்த்தையில் இந்தியா கையொப்பம் இடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story