போலீசாருடன் நடந்த மோதல்: டெல்லியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
டெல்லியில் கடந்த சனிக்கிழமையன்று போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
புதுடெல்லி,
டெல்லியில் தீஸ் ஹசாரி கோர்ட்டு வளாகத்தில் கடந்த சனிக்கிழமையன்று கைதிகளை ஏற்றி வந்த சிறை வாகனம் மீது வக்கீல் ஒருவரின் கார் மோதியதை தொடர்ந்து அந்த வக்கீல் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 17 வாகனங்கள் அடித்து நொறுக்கி, தீ வைத்து கொளுத்தப்பட்டன. துப்பாக்கி சூடு நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது. இந்த மோதலில் 20 போலீசார் மற்றும் வக்கீல்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்த டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், டெல்லி ஐகோர்ட்டு மற்றும் தீஸ் ஹசாரி, கர்கர்டூமா, சாகேத், துவாரகா, ரோகிணி, பட்டியாலா ஹவுஸ் ஆகிய மாவட்ட கோர்ட்டுகளின் வக்கீல்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் எந்த வழக்கிலும் ஆஜராகாமல் கோர்ட்டுகளை புறக்கணித்தனர்.
Related Tags :
Next Story