சிவசேனா உடையும் 25 எம்.எம்.எல்.ஏக்கள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசுடனும் தொடர்பில் உள்ளனர் -சுயேட்சை எம்.எல்.ஏ.
சிவசேனா உடையும் என்றும் 25 எம்.எம்.எல்.ஏக்கள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசுடனும் தொடர்பில் உள்ளனர் என்றும் சுயேட்சை எம்எல்ஏ கூறியுள்ளார்.
மும்பை
மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா-சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டு உள்ள மோதலால் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.
சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவதற்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக அக்கட்சி பா.ஜனதாவை மிரட்டி வருகிறது. இதனால் மராட்டிய மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் பாஜகவுக்கு ஆதரவளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ ரவி ரானா கூறியதாவது:-
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றதற்கு காரணமே பாஜக தான். இல்லையெனில் 25 இடங்களில்தான் சிவசேனா வெற்றி பெற்றிருக்கும்.
தற்போதும் சிவசேனாவின் 25 எம்.எல்.ஏக்கள் என்னுடனும் முதல்வர் தேவேந்திர பட்னாவிசுடனும் தொடர்பில் உள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில் அமருவது என சிவசேனா முடிவெடுத்துவிட்டால் அந்த 25 எம்.எல்.ஏக்களும் பட்னாவிஸ் தலைமையிலான அரசில் இணைவார்கள்.
வாக்காளர்கள் தெளிவான தீர்ப்பை தந்தும் சிவசேனாதான் முட்டுக்கட்டை போடுகிறது. இது மராட்டிய மக்களை அவமதிப்பதாகும். மராட்டிய முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்ற பின்னர் ஓரிரு மாதங்களில் சிவசேனாவின் 20 முதல் 25 எம்.எல்.ஏக்கள் பாஜக பக்கம்தான் வருவார்கள்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தேவேந்திர பட்னாவிசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உத்தவ் தாக்கரேதான். ஆகையால் அவர்தான் எந்த விவகாரத்தையும் பேச வேண்டும். சஞ்சய் ராவத் பேசக் கூடாது. இவ்வாறு ரவி ரானா கூறினார்.
Related Tags :
Next Story