’காவலர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்’ டெல்லி சிறப்பு ஆணையர் வேண்டுகோள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காவலர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று டெல்லி சிறப்பு ஆணையர் கிருஷ்ணியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி கோர்ட்டில் கடந்த சனிக்கிழமை, போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், 20-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன.
போலீசார் மீது வழக்கறிஞர்கள் நடத்திய தாக்குதலை கண்டிக்கும் விதமாக டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் கடந்த 7 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி சிறப்பு ஆணையர் கிருஷ்ணியா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காவலர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். வழக்கறிஞர்களுடனான மோதலில் காயமடைந்த காவலர்கள் குடும்பத்திற்கு ரூ.25,000 வழங்கப்படும்.
காவலர்களை தாக்கிய வழக்கறிஞர்களுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தாக்கியது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story