டெல்லி போலீசாரின் 11 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது
டெல்லியில் 11 மணி நேரமாக நடைபெற்று வந்த போலீசாரின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி கோர்ட்டில் கடந்த சனிக்கிழமை, போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், 20-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன.
போலீசார் மீது வழக்கறிஞர்கள் நடத்திய தாக்குதலை கண்டிக்கும் விதமாக டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் இன்று காலை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
11 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்து வந்த நிலையில், உயர் அதிகாரிகளின் உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கலவரத்தில் காயம் அடைந்த காவல்துறையினருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு அளிக்கப்படும் என்று காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.
அதேபோல், மோதல் தொடர்பாக டெல்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்று உயர் அதிகாரிகள் உறுதி அளித்து இருந்தனர்.
Related Tags :
Next Story