நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்


நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்
x
தினத்தந்தி 6 Nov 2019 12:16 PM GMT (Updated: 6 Nov 2019 12:16 PM GMT)

தொழிலதிபர் நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்தது.

லண்டன், 

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார். இந்திய அரசின் வேண்டுகோளின்படி, லண்டன் காவல் துறையினர் நீரவ் மோடியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தற்போது லண்டனின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள வான்ட்ஸ்வொர்த் சிறைச்சாலையில், நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.  இதற்கிடையில், தனக்கு ஜாமீன் கோரி நீரவ் மோடி, லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணைக்காக நீதிமன்றத்தில் நீரவ் மோடி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இருமடங்கு பிணைத்தொகை அளிக்க தயாராக இருப்பதாக நீரவ் மோடி தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், அவரது ஜாமீன் மனுவை நிராகரித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Next Story