எரித்து கொல்லப்பட்ட பெண் தாசில்தாருக்கு தீ வைத்தவரும் சாவு


எரித்து கொல்லப்பட்ட பெண் தாசில்தாருக்கு தீ வைத்தவரும் சாவு
x
தினத்தந்தி 8 Nov 2019 3:59 AM IST (Updated: 8 Nov 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள அப்துல்லாபுர்மெட் மண்டல் பெண் தாசில்தார் விஜயா ரெட்டி கடந்த 4-ந்தேதி அவரது அலுவலகத்திலேயே எரித்து கொல்லப்பட்டார்.

ஐதராபாத், 

தாசில்தார் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த சுரேஷ் என்பவரும், தாசில்தாரை காப்பாற்ற முயன்ற ஊழியர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் தாசில்தாரின் டிரைவர் குருநாதம் 5-ந் தேதி இறந்தார். இந்நிலையில் தீவைத்த சுரேஷும் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சுரேஷ் முன்னதாக போலீசாரிடம் கூறும்போது, தான் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருவதாக கூறியுள்ளார். அவருக்கும் அவரது சகோதரருக்கும் சேர்த்து 7 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், அதனை வாடகைக்கு விடுவதில் பிரச்சினை இருப்பதாகவும், இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது. போலீசார் இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து சுரேஷ் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story