அயோத்தி வழக்கு தீர்ப்பு வருவதால் ரெயில்வே பாதுகாப்பு படையினரின் விடுமுறை ரத்து
அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதையொட்டி, ரெயில்வே பாதுகாப்பு படை தனது அனைத்து மண்டலங்களுக்கும் 7 பக்க உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்தது.
புதுடெல்லி,
ரெயில்வே பாதுகாப்பு படையினரின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் ரெயில்களில் பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டும் என்றும்
அதில், உத்தரவிடப்பட்டு உள்ளது. ரெயில் பிளாட்பாரம், ரெயில்வே யார்டு, வாகன நிறுத்த பகுதி உள்பட அனைத்து இடங்களிலும், ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள மத வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கூறியுள்ளது.
78 முக்கிய ரெயில் நிலையங்களில் படையினர் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் எல்லா நேரமும் மின்விளக்குகள் எரிய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Related Tags :
Next Story