என்னையும், எனது குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி - ராகுல்காந்தி


என்னையும், எனது குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 8 Nov 2019 3:45 PM GMT (Updated: 8 Nov 2019 3:45 PM GMT)

என்னையும், எனது குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

28 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, உத்தர பிரதேச மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புப் படை பாதுகாப்பை (எஸ்பிஜி)  மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இனிமேல் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கும் சிஆர்பிஎப் மூலம் வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. அதற்குப் பதிலாக சிஆர்பிஎப் சார்பில் வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிறப்பு பாதுகாப்புப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல்காந்தி டுவீட் செய்துள்ளார். 

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

உங்கள் அர்ப்பணிப்பு, நிலையான ஆதரவு மற்றும் பாசம் நிறைந்த பயணத்திற்கு நன்றி. என்னையும், எனது குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி. இது ஒரு பாக்கியமாக கருதுகிறேன். உங்கள் எதிர்காலம் சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

Next Story