அயோத்தி வழக்கில் வரலாற்று தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாழ்க்கை பயணம்!


அயோத்தி வழக்கில் வரலாற்று தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாழ்க்கை பயணம்!
x
தினத்தந்தி 9 Nov 2019 12:02 PM GMT (Updated: 9 Nov 2019 12:02 PM GMT)

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அயோத்தி வழக்கில் வரலாற்று தீர்ப்பை வழங்கிய தீர்வைக் கண்டுள்ளார்.

புதுடெல்லி,

அயோத்தி வழக்கில் தீர்ப்பை வழங்கியதன் மூலம், நீண்ட கால  பிரச்சினையில் தீர்வைக் கண்டுள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். அவரது வாழ்க்கை பயணத்தை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு.

அசாமிலுள்ள திப்ருகார் பகுதியில் 1954ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி ரஞ்சன் கோகாய் பிறந்தார். ரஞ்சனின் தந்தை அசாமின் முன்னாள் முதல்-மந்திரி கெசாப் சந்திர கோகாய் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கெசாப் சந்திர கோகாய் கடந்த 1982ஆம் ஆண்டு அசாமின் முதல்-மந்திரியாக இருந்தார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் ஒன்றிலிருந்து இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நபர் ரஞ்சன் கோகாய் என்பது பெருமிக்குரிய விஷயமாகும்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலை பட்டப்படிப்பை முடிந்த ரஞ்சன் கோகாய், அதே பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார்.

1978ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவுசெய்த ரஞ்சன் கோகாய், கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2001ஆம் ஆண்டு பதவியேற்ற அவர், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்திலும் பணியாற்றி உள்ளார்.

அரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2011ஆம் ஆண்டு பதவியேற்ற  ரஞ்சன் கோகோய், அடுத்த ஆண்டே உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் குஜராத் அரசாங்கத்திற்கு எதிரான வழக்கு, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் வருமானம் பற்றிய வழக்கு, பல்லாண்டுகளாக அசாமில் வாழ்ந்து வரும் வங்கதேச குடியேறிகள் சார்ந்த வழக்கு போன்ற பல்வேறு வழக்குகளில் ரஞ்சன் சிறப்பான தீர்ப்பை வழங்கியவராக அறியப்படுகிறார்.

தங்களது சொத்து விவரங்களை வெளியிட்ட 11 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் இவரும் ஒருவர். அவர் வைத்திருக்கும் நிலம், நகைகள், பணம் போன்றவற்றின் விவரங்களை பார்த்தால் அவர் எப்படிப்பட்ட எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார் என்பது தெரியும். ரஞ்சனிடம் சொந்தமாக ஒரு கார்கூட இல்லை. எப்போதெல்லாம் மாற்றம் உள்ளதோ, அப்போதெல்லாம் தனது சொத்து விவரத்தை ரஞ்சன் புதுப்பித்து வருகிறார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக, ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம்  நவம்பர் 17-ம் தேதி நிறைவடைய உள்ளது. அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story