தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன் + "||" + K. Parasaran is a 92-year-old legal lawyer who has stood trial in the Ayodhya case

அயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்

அயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்
அயோத்தி வழக்கில் 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன் நின்று கொண்டே வாதாடினார்.
புதுடெல்லி,

அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கில் ராம்லல்லா சார்பில் வாதாடியவர்களில் பிரபல சட்ட நிபுணர் கே.பராசரன் முக்கியமானவர்.

ஒரு நாள் வழக்கு விசாரணையின் போது அவரிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “உங்கள் வயதுக்கு மதிப்பளித்துச் சொல்கிறேன். ஒரு நாற்காலி போடச் சொல்கிறேன். அமர்ந்து வாதங்களைச் சொல்லுங்கள்” என்றார்.


அதற்கு, “வக்கீல் நின்று வாதிடுவதுதான் முறை. என் ராமனுக்காக நிற்பேன். நிற்க இயலாது போனால் நீதிமன்றம் வருவதை நிறுத்திக் கொள்வேன்” என்று சொல்லி, 92 வயதிலும் நின்றுகொண்டே வாதாடினார் தமிழகத்தைச் சேர்ந்த முதுபெரும் வழக்கறிஞர் கே.பராசரன்.

இந்த வழக்கில் அவர் ஒரு ரூபாய்கூட ஊதியம் பெற்றுக்கொள்ளவில்லை. இதுவே தனது கடைசி வழக்கு என்றும் அறிவித்திருந்தார்.

அயோத்தி வழக்கின் நியாயமான தீர்ப்புக்கு உறுதுணையான தெளிவான, உறுதியான வாதங்களை கே.பராசரன் முன்வைத்த போது, உடன் பக்கபலமாக வாதாடினார் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன். இவர் வழக்கு நடைபெற்ற 40 நாட்களும் காலணி அணியவில்லை.

தொழில் பக்தியும், இறை பக்தியும் இணைந்த இவ்விருவரின் வாதங்களே நீதிபதிகளை உண்மையை நோக்கி வழிநடத்தின.


தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி வழக்கை படமாக்கும் கங்கனா
நடிகை கங்கனா ரணாவத் அயோத்தி வழக்கை படம் எடுக்க உள்ளார்.